தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவர எப்படி 'தல'ன்னு சொல்லலாம் - சமூகவலைதளத்தில் சண்டையிடும் 'தல' வெறியர்கள்! - தனுஷ் சிம்பு ரசிகர்களுடன் அஜித் ரசிகர்கள் மோதல்

ஐபிஎல் 2021 தொடர் சாம்பியன்ஷிப் பட்டத்தை நான்கவது முறையாக வென்ற சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு, தனுஷ் பதிவிட்ட ட்வீட், தற்போது அஜித் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

v
v

By

Published : Oct 16, 2021, 6:43 PM IST

ஐபிஎல் 2021 சீசனின் சாம்பியன்ஷிப் பட்டத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. 2010, 2011, 2018ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிஎஸ்கே கோப்பையைத் தட்டித்தூக்கியுள்ளது.

இந்த வெற்றியை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், தமிழ்நாடு முதலமைச்சர், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூகவலைதளங்கள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷூம், சிம்புவும் சென்னை அணியின் கேப்டனான தோனியை வாழ்த்தி பதிவிட்ட ட்விட் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றியுள்ளது.

தனுஷ் தனது ட்வீட்டில், " காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஷேன் வாட்சன் விளையாடிய போட்டி நினைவுக்கு வருகிறது. டூ பிளசிஸ், கெய்வாட், உத்தப்பா, ஜடேஜா, ஒன் அண்ட் ஒன்லி ஒன் தல எங்க தோனிக்கு விசில் போடு என பதிவிட்டிருந்தார். அதே போல் சிம்பு தனது ட்வீட்டில் தல தோனி என பதிவிட்டிருந்தார்.

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் தல என்ற பெயர் அஜித்துக்கு மட்டுமே சொந்தம், அது எப்படி தோனியை தல என கூப்பிடலாம் என சமூகவலைதளத்தில் தனுஷையும் சிம்புவையும் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதன் விளைவாக சமூகவலைதளத்தில், #நன்றிகெட்டநாய் சிம்பு, #நன்றிகெட்டஎழும்பன்_தனுஷ், #ஆமைஅஜித் போன்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமாக தல-தளபதி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் சண்டையிட்டு வருவார்கள். ஆனால் இன்று (அக்.16) தனுஷ், சிம்பு ரசிகர்களுடன் அஜித் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை தல தோனி என ரசிகர்கள் அழைத்த நிலையில், அஜித் ரசிகர்கள் அவரை அப்படி அழைக்கவேண்டாம். தல என்றால் அது அஜித் மட்டுமே என கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் இன்னும் விட்டுப்போகவில்லையே - அடுத்த சீசன் குறித்து தோனி சூசகம்

ABOUT THE AUTHOR

...view details