ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இன்று முதல் உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் குதூகலத்துடன் கொண்டாடிவருகின்றனர். நடிகர் அஜித்திற்கு ரசிகர்களைத் தாண்டி திரையுலகிலும் பேரன்பு கொண்ட ரசிகர்களும் உள்ளனர்.
சத்யம் திரையரங்கில் தீக்குளிக்க முயன்ற அஜித் ரசிகர்! - ரசிகர் தீக்குளிக்கு முயற்சி
சென்னை சத்யம் திரையரங்கில் 'நேர்கொண்ட பார்வை' படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சாந்தனு சென்னை சத்யம் திரையரங்கிற்கு 'நேர்கொண்ட பார்வை' படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, நடிகர் சாந்தனு தனது ட்விட்டரில், 'எனது அருகிலிருந்த ரசிகர் ஒருவர் தனது உடம்பில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க தீக்குச்சியைச் தேடியுள்ளார்.
என்ன காரணம் என்று விசாரித்தபோது, 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிக்கெட் பிரச்னையால் இவ்வாறு செய்ததாகவும், இதனையடுத்து காவல் துறையினர் கைது செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், உச்ச நடிகர்களாக இருக்கும் அஜித், பிற நடிகர்கள் ரசிகர்கள் செய்யும் இதுபோன்ற செய்கைகளை செய்ய ஊக்குவிக்க வேண்டாம்' என சாந்தனு வேண்டுகோள் விடுத்துள்ளார்.