'விஸ்வாசம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. 'பிங்க்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' உடன் ஆக.8ஆம் தேதி வருகிறார் அஜித்! - boney kaboor
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் அதிரடியான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், டிரெய்லர் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறிய மாற்றம் செய்து ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், அஜித்தின் சென்டிமென்ட் நாளான வியாழக்கிழமை படம் வெளியாகிறது.
படத்தின் டிரெய்லர் வெளியானதற்கே பேனர் வைத்து கொண்டாடிய அவரது ரசிகர்கள் #thalaajith என்ற ஹேஷ்டாக் மூலம் இணையத்தை கலங்கடித்து வருகின்றனர்.