தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகனுடன் சேர்ந்து மரம் நட்டு வைத்த அஜய் தேவ்கன் - அஜய் தேவ்கன் படங்கள்

மும்பை: நடிகர்  அஜய் தேவ்கன் அவரது மகனுடன் சேர்ந்து மரம் நட்டு வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன்

By

Published : Jun 20, 2021, 12:27 PM IST

நடிகர் அஜய் தேவ்கன் தனது மகன் யுக்குடன் இணைந்து மும்பையில் மரம் வளர்ப்பு இயக்கத்தினரோடு ஒன்றிணைந்து, மரம் நட்டு வைத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "நான் முயற்சி செய்து ஒரு முன்மாதிரியாக மட்டுமே இருக்க முடியும். குழந்தைகள் உள்பட அனைவரும் மரம் நட வேண்டும்.

மரம் நட்டு வைத்த அஜய் தேவ்கன்

நான் இதைச் செய்வதால் எதுவும் மாறாது. அனைவரும் செய்தால்தான் மாற்றம் உருவாகும். சாலையில் உள்ள நிறைய மரங்கள் கீழே விழுகின்றன. உங்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது அருகில் மரங்கள் இருந்தால் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:’ஷெர்னி’ பட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வித்யா பாலன்

ABOUT THE AUTHOR

...view details