பாலிவுட்டில் நடிகர்கள் அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தி பிக் புல்'. இதில் நடிகை இலியானா நிகிதா தத்தா, சோஹம் ஷா, ராம் கபூர், சுப்ரியா பதக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. 30 நொடி உள்ள அதில், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான அஜய் தேவ்கன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க மும்பையில் தயாராகியுள்ள இப்படத்தை குக்கி குலாட்டி இயக்கியுள்ளார்.