பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கி வரும் படம் 'RRR'. அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதில் அஜய் தேவ்கான், ஆலியா பட்ட் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அஜய் தேவ்கான் 'RRR' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படத்தின் இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.