க/பெ.ரணசிங்கம் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ’பூமிகா’. ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஸ்வின், குரு சோமசுந்தரம், அபய் தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் ’பூமிகா’ பட போஸ்டர் வெளியீடு! - ஐஸ்வர்யா ராஜேஷ் படம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பூமி
இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று (அக். 19) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். மலைப் பகுதிகளில் உருவாகியுள்ள இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’வாடிவாசல்’ படத்திற்காக நீளமாக முடி வளர்த்த சூர்யா?