தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மிஸ்மேட்ச்’ வெளியாகும் தேதி அறிவிப்பு! - Mismatch release date announced

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்மேட்ச்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Mismatch

By

Published : Nov 15, 2019, 11:36 PM IST

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மிஸ்மேட்ச்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!’சலிம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமாரின் அடுத்த படைப்பு ‘மிஸ்மேட்ச்’. தெலுங்கில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், உதய் சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருக்கிறார்.

பழம்பெரும் எழுத்தாளர் பூபதி ராஜா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஸ்ரீராம் ராஜு, பரத் ராம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு கிஃப்டோன் எலியாஸ் இசையமைத்துள்ளார். இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வரும் டிசம்பர் 6ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details