கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை அதிகம் தேர்வுசெய்து நடித்துவரும் ஹீரோயின்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள, 'திட்டம் இரண்டு' படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். த்ரில்லர் படமான இப்படத்தை தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
'திட்டம் இரண்டு' படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. திட்டம் போட்டு இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. அவை எதனால் நடைபெறுகின்றன, யார் செய்தார் என்பதைக் காவலராக இருக்கும் ஐஸ்வர்யா கண்டுபிடிப்பதே படத்தின் கதையாக இருக்கும் என டீசர் மூலம் தெரிகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில், திரையரங்கு திறப்பதற்காகக் காத்திருந்தது. ஆனால் தற்போதுவரை திரையரங்குகள் திறக்காத காரணத்தினால், 'திட்டம் இரண்டு' படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவுசெய்துள்ளனர். அதன்படி 'திட்டம் இரண்டு' திரைப்படம் வரும் 30ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு'