தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து புதிய படத்தில் நடித்துவருகின்றனர். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தினை ஜிஎஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அருள் குமார் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து அருள் குமார் கூறுகையில், எங்கள் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் காண, மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தனது திறமையான இயக்கத்தின் மூலம், திட்டமிட்ட காலகட்டத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளார்.