'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கும் புதிய படம் 'டிரைவர் ஜமுனா'. இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணித் தயாரிப்பாளருமான எஸ்.பி. செளத்ரி மிகப்பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்துவருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் - டிரைவர் ஜமுனா
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 14) பூஜையுடன் தொடங்கியது.
ஜிப்ரான் இசையமைக்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக (சீருந்து ஓட்டுநர்) நடிக்கிறார். இன்றைய கால கட்டத்தில் தினசரி வாழ்க்கையில் சீருந்து ஓட்டுநர்களைக் கடந்துபோய் வருகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண் சீருந்து ஓட்டுநரை மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பிடித்துப்போகவே படத்தில் நடிக்க தேதி ஒதுக்கியுள்ளார். சென்னையில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பிற்றி இன்று (ஏப்ரல் 14) டிரைவர் ஜமுனா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.