தமிழ் சினிமாவில் '3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். இவர் ரஜினி காந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும் ஆவர். இவர் தற்போது 'சர்வா யோகா' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இந்தக் கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.