‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம் தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கும் படம் ஐரா. இப்படத்தை‘லக்ஷ்மி, மா’ குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற சர்ஜுன்.கே.எம் இயக்குகிறார்.ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படம்நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாகும். இதனை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.
நயன்தாராவின் 'ஐரா' ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு! - கோலமாவு கோகிலா
இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ட்ரைய்லர் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் பாடல்கள், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பினை படக்குழு அறிவித்துள்ளது. பர்ஸ்ட்லுக், பாடல்களை தொடர்ந்து ஐரா படத்தின் ட்ரெய்லர் வரும் 20ம் தேதி மூவிபப்இன்டியாவில் மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை பார்ப்பதற்கு நயன்தாரா ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.