உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, இந்தியவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரோனா வைரஸ் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து ஏ.ஜி.எஸ் திரையரங்குகளும் மூடப்படுவதாக, பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கணபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.