நடிகர்கள் விஜய் ஆண்டனி - அருண் விஜய்யை வைத்து 'மூடர் கூடம்' நவீன், 'அக்னிச் சிறகுகள்' படத்தை இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கும் இதில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது, கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “ட்ராம். கொல்கத்தாவின் அழகிய அடையாளம். #அக்னிசிறகுகள் இறுதிகட்ட படப்பிடிப்பில்” என்று குறிப்பிட்டுள்ளார்.