தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அரசியல் ஆளுமை, ஸ்வாதி கொலை': மிரட்டும் அக்னி தேவி ட்ரெய்லர்! - மதுபாலா

மதுபாலா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள "அக்னி தேவி" படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அக்னி தேவி

By

Published : Mar 20, 2019, 4:12 PM IST

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் "அக்னி தேவி". இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய வேடத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

"சென்னையில் ஒரு நாள்" படத்தின் இயக்குநர் ஜான்பால் ராஜன் மற்றும் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

அரசியல் ஆளுமை, சுவாதி கொலை, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்தையும் இப்படம் பேசும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் கெட்டப்பில் வருகிறார், ரம்யா நம்பீசன் பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபாலா தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கும் படம், அதிலும் அவரது பஞ்ச் டயலாக் "ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்" வசனம் திரையரங்கை அதிர வைப்பதில் ஆச்சரியம் இல்லை என்றே கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details