பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில், இரு தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி, ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.
இந்த திரைப்படம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், படக்குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது குறித்து, நடிகர் பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன், காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
இந்நிலையில் படம் வெளியானது குறித்து தனது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். "அக்னி தேவி படத்தில் நான் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்தேன். என்னிடம் சொல்லப்பட்ட கதையை அவர்கள் எடுக்கவில்லை. எனவே அந்த படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன்.
என்னை போன்று வேறுயாரையோ வைத்து டூப்போட்டு படத்தை எடுத்துள்ளனர். சில காட்சிகளில் கிராபிக்ஸ் செய்துள்ளனர். வேறு சிலரை வைத்து டப்பிங் பேசியுள்ளனர். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குநரும் பாபிசிம்ஹா மேனேஜரும் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த ஆடியோவில் இயக்குநர் கூறியாதவது, பாபி சிம்ஹாவிற்காக செலவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் நானும் தயாரிப்பாளரும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிவரும். எனக்கு எனது படத்தை எப்படியாவது காப்பற்றி ஆகவேண்டும். பாபி செய்த செயல் மிக வருத்தம் அளிக்கிறது. பட தலைப்பான அக்னி தேவ்வை அவர் பெயரில் பதிவு செய்தது கண்டிக்கதக்கது என்று அதில் தெரிவித்திருந்தார்.