திருநங்கை கதாபாத்திர சர்ச்சை: மன்னிப்புக் கோரிய ஹாலே பெர்ரி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி, திருநங்கை கதாபாத்திரத்தில் தான் நடிப்பதில்லை என கூறியதற்கு தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் திருநங்கைகளின் கதாபாத்திரத்தை தான் கருத்தில் கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு சமூக வலைதள பக்கத்திலும், ஹாலிவுட் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியது.
அதுமட்டுமல்லாது இவரின் இந்தப் பேச்சால் இவரது சமூக வலைதள பக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. தற்போது தனது கருத்திற்கு ஹாலே பெர்ரி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹாலே பெர்ரி, சிகையலங்கார நிபுணர் கிறிஸ்டின் பிரவுனுடன் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் லைவில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது "என் புதிய படத்தில் பெண் ஒரு டிரான்ஸ் கேரக்டராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் உள்ளது. அதாவது ஆணாக மாறி ஒரு பெண் கதாபாத்திரம். இதில் நடிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.
வார இறுதியில், ஒரு படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இறுதியாக அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இதன்மூலம் நான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன். திருநங்கைகளின் மன கஷ்டங்களும், அவர்களால் வெளியே சொல்ல முடியாத கதைகளும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தையும் இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.