கன்னட மொழியில் அறிமுகமான ராஷ்மிகா, தெலுங்கில் வெளியான, ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் பிரபலமானார். இதனையடுத்து தமிழில், ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கன்னடா, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து தற்போது, பாலிவுட்டில் ராஷ்மிகா என்ட்ரி கொடுத்துள்ளார். ’மிஷன் மஜ்னு’ படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள இவர், இரண்டாவதாகக் ’குட்பை’ படத்தில் நடிக்கிறார்.
அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘குட்பை’ படம் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டெர்டெய்னராக உருவாகிறது. இன்னும் பாலிவுட்டில் அவரது முதல் படமே வெளியாகாத நிலையில், அங்கு வரிசையாக அவருக்குப் பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளன.