தன் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவைப் பிரிவதாக சமந்தா அறிவித்தது முதல் சமூக வலைதளங்களில் சமந்தா குறித்த விவாதங்களும், கலவையான விமர்சனங்களும் தொடர்ந்து வருகின்றன.
முன்னதாக தன் திருமண வாழ்வு குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த சமந்தா, தன் தனிப்பட்ட வாழ்வில் யாரும் தலையிட வேண்டாம் எனக்கூறி கடிதம் ஒன்றையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். எனினும், தன் தனிப்பட்ட திருமண வாழ்வு, பிரச்னைகளை தாண்டி மற்றொருபுறம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
முன்னதாக ’சார் தம்’ எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு சமந்தா யாத்திரை சென்றிருந்தார். மன அழுத்தத்தைப் போக்கும் விதமான சமந்தாவின் இந்த பக்தி யாத்திரை குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாது.
இந்நிலையில், வெகு நாள்களுக்குப் பிறகு தன் உதவியாளர்களுடன் சமந்தா பகிர்ந்துள்ள மகிழ்ச்சியான புகைப்படம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.