தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சொன்ன டைமுக்கு 'பச்சன் பாண்டே' வரல ஆனா 'பெல் பாட்டம்' வரும் - அக்‌ஷய் குமார் - பெல் பாட்டம் படம் வெளியாகும் தேதி

அக்‌ஷய் குமார் தனது நடிப்பில் உருவாகிவரும் 'பெல் பாட்டம்' படம் வெளியாகும் தேதியை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Bell Bottom
Bell Bottom

By

Published : Jan 27, 2020, 11:25 PM IST

இயக்குநர் ராஜ் மெஹ்தா இயக்கத்தில் அக்‌ஷய் குமார், கரீனா கபூர், கியாரா அத்வானி, தில்ஜித் தோசஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'குட்நியூஸ்'. கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தனுஷூடன் ஆனந்த் எல். ராய் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, அக்‌ஷய் குமார் 'பிரித்விராஜ்', 'பச்சன் பாண்டே' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் 'பச்சன் பாண்டே' படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 'பச்சன் பாண்டே' வெளியாகும் அதே தேதியில் ஆமீர்கானின் ’லால் சிங் சத்தா' படம் வெளியானதால், 'பச்சன் பாண்டே' படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் 'பெல் பாட்டம்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிங்க: ஆமிர்கானுக்காக விட்டுக்கொடுத்த பக்‌ஷி ராஜ
ன்

ABOUT THE AUTHOR

...view details