நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ’விக்ரம் வேதா’ படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்த் பெற்றார். இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் தற்போது இப்படத்தை இந்தியில் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த நிலையில், முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான், ஹிரித்திக் ரோஷன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியைத் தழுவியதாகக் கூறப்பட்டது.