நடிகர் கரண், ஷம்மு, கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கோபி இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் மலையன். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உண்மை கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.
11 ஆண்டுகளுக்கு பிறகு கரோனாவால் ட்ரெண்டான கரண் பட பாடல்!
’மலையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள சோக பாடல் ஒன்று கரோனா வைரஸ் காரணமாக, 11 ஆண்டுகளுக்கு பிறகு மிண்டும் ட்ரெண்டாகி உள்ளது.
இதில் தீனா இசையில் , சினேகன் எழுதிய "பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா" என்ற பாடல் 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும், தற்போது டிக் டாக் செயலியில் ட்ரெண்டாகியுள்ளது. இந்தப் பாட்டிற்கு பெண்கள் பலரும் ஏன் திடீரென்று டிக் டாக் செய்து வீடியோ வெளியிடுகிறார்கள் என்று புரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
பிறகுதான் தெரிந்தது, கரோனா பாதிப்பால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவர்களை நினைத்து, பெண்கள் டிக் டாக் செய்து வெளியிடுகிறார்கள் என்று. 11 ஆண்டுகளுக்கு பிறகு மிண்டும் இப்பாடல் ட்ரெண்டாவது மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.