தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜூன். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.
அல்லு அர்ஜூன் தற்போது 'புஷ்பா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கரோனா காலத்தில் புகை பிடிப்பவர்கள் கரோனவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே மருத்துவர்கள் புகை பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மாற்றத்தைத் தூண்டுவதற்கு நடிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புகை பிடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் புகை பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், " புகை பிடிப்பதின் தீமைகளை குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 1990களின் காலகட்டத்தில் மேற்கத்திய கலாசாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோதுதான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.