தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அடுத்த சாட்டை' வெளியாகும் தேதி அறிவிப்பு! - சமுத்திரக்கனி புதியபடம்

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள 'அடுத்த சாட்டை' படம் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

AduthaSaattai

By

Published : Nov 10, 2019, 4:22 PM IST

2012ஆம் ஆண்டு வெளியான படம் 'சாட்டை'. இதில், இயக்குநர் சமுத்திரக்கனி பள்ளி ஆசிரியர் வேடத்தில் ரசிகர்களுக்கு பாடம் எடுத்திருப்பார். அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டிய படம். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து பொதுமக்களிடையே பெரிய விவாதத்தையும் எழுப்பியது.

சாட்டை படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'அடுத்த சாட்டை' என்று படக்குழு பெயர் வைத்துள்ளது.

இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். நடிகை அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன், இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை டாக்டர் பிரபு திலக்கின் 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details