சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'சாட்டை'. இப்படத்தில், மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள புரிதலையும், பாடம் கற்பிக்கும் முறையில் மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தெளிவாக காட்சிப்படுத்தியிருந்தனர். இளைஞர்களிடத்தில் இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சாட்டை படத்தின் இரண்டாம் பாகம் 'அடுத்த சாட்டை' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் யுவன், அதுல்யா ரவி, கன்னிகா ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.
'ஊரை சுற்றும் மோடி' - பிரதமரை விளாசும் 'அடுத்த சாட்டை' - single track
இயக்குநர் எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'அடுத்த சாட்டை' படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் பாகம் பள்ளிக்கூட பிரச்னையை பற்றி பேசியது. இதில் கல்லூரிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடக்கும் பிரச்னையை பேசியுள்ளனர். நல்ல கதை தேர்வுடன் சமூகம் சார்ந்த பிரச்னைகளை பேசும் படங்களில் நடிக்கும் சமுத்திரக்கனி, இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார். தற்போது 'அடுத்த சாட்டை' படத்தில் இடம்பெற்றுள்ள 'எங்க கையில குடுங்க' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. சாதி, மதம் வைத்து மக்களை பிரிக்கும் அரசியல்வாதி வேண்டாம், இளைஞர்களின் கையில் நாட்டை கொடுங்க, மோடியை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளுக்கு ஜஷ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப்பாட்டில் நீட் தேர்வால் இறந்த அனிதா, எட்டு வழிச்சாலை திட்டம், பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் என மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் பாடல் இளைஞர்களின் ஹாட்பீட்டாக மாறியுள்ளது.