நடிகை மலைக்கா அரோரா அடிக்கடி தனது சகோதரி அமிர்தா அரோராவுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையில் இன்று(ஆகஸ்ட் 3), ரக்ஷா பந்தனை முன்னிட்டு, மலைக்கா தனது சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீ என் சகோதரி மட்டுமல்ல. எனக்குத் தேவைப்படும்போது, நீ என் சிறந்த நண்பராக இருக்கிறாய். அதனால், நான் ஒருபோதும் உன்னை இழக்க மாட்டேன். ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்.
என் வாழ்க்கையில் நீ ஒரு சகோதரி, சகோதரர், நண்பர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருப்பதற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.