மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் அதிதி ராவ் ஹைதரி. இதன் பின்னர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் தோன்றினார். சமீபத்தில் உதயநிதி நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்திலும் நடித்திருந்தார்.
கோழிகோடு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்ட அதிதி ராவ் - கோழிக்கோடின் புகைப்படங்கள்
கோழிகோடில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை அதிதி ராவ் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வருடம் அவர் ஐந்து படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் கேரள மாநிலம் கோழிகோடில் நடந்த படப்பிடிப்பின்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருப்பினும் அந்த படம் குறித்த வேறு எந்த ஒரு தகவலையும் அதில் அவர் பகிரவில்லை.
பரினீதி சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள ’த கேர்ள் ஆன் த ட்ரெயின்’ என்னும் படத்தில் அதிதி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் மே மாதம் வெளியாகிறது. மேலும் இரண்டு தமிழ் படங்கள் ஒரு தெலுங்கு, ஒரு மலையாள திரைப்படம் தற்போது அவர் கைவசம் உள்ளது.