2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜூன் ரெட்டி'. இப்படத்தில் விஜய்தேவரகொண்டா காதல் தோல்வியில் தன்னையே வருத்திக்கொள்ளும் நாயகனாக நடிப்பில் மிரட்டியிருந்தார். 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களை வியக்க வைத்தது. தமிழில் 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் ரீமேக்காகும் இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் பாலா 'வர்மா' என்ற பெயரில் துருவ் விக்ரமை வைத்து இயக்கிருந்தார்.
'ஆதித்யா வர்மா' படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் - பிரியா ஆனந்த்
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் 'ஆதித்யா வர்மா' திரைப்படம் ஜீலை மாதத்தில் வெளியாகிறது.
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் காட்சிகளில் சுவாரசியம் இல்லாததால் அப்படம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 'அர்ஜூன் ரெட்டி' பட ரீமேக்கை மீண்டும் 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் கிரியாசாயா இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா வர்மாவாக உருவாகி வரும் இப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் பாலிவுட் நடிகை பனிதா சாந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், பிரியா ஆனந்த் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் கிரியாசாயா இயக்கி வரும் ஆதித்யா வரமா திரைப்படம் வருகின்ற ஜீன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.