'தன்ஹாஜி' படத்தையடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'ஆதிபுருஷ்'.
'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியாகத் தயாராகியுள்ள இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடித்துள்ளனர்.
3டி தொழில் நுட்பத்தால் தயாராகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் ஓம் ராவத் வெளியிட்ட பதிவில், "ஆதிபுருஷ் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஒரு அற்புதமான பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. 103 நாளில் படப்பிடிப்பு முடிந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆதிபுருஷ் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகிறது.
இதுதவிர நடிகர் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்', 'சலார்' ஆகியப் படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகிறது.
இதனால் பிரபாஸ் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு ட்ரிபிள் ட்ரீட் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அட்லீ - ஷாருக்கான் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா?