'தன்ஹாஜி' படத்தை அடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், 'ஆதிபுருஷ்'. 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியைத் தழுவி எடுக்கப்பட்டுவரும் இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.
மிகப் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படக்குழு தயாரித்துவருகின்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 'ஆதிபூருஷ்' உருவாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கரோனா தொற்று காரணமாகத் தள்ளிப்போனது. இதனையடுத்து தொற்று குறைந்த நிலையில் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் 'ஆதிபூருஷ்' 2022 அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்