தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குட்டி பட்டாஸை தொடர்ந்து ஹிட் அடித்த அஸ்வின் பாடல் - அடிபொலி

நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியான ’அடிபொலி’ பாடலை யூ-டியூப்பில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

அடிபொலி
அடிபொலி

By

Published : Sep 6, 2021, 10:29 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர், தற்போது 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் அஸ்வின் சமீபத்தில் ’அடிபொலி’ என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். தியா பட பிரபலம் குஷி ரவி அவருக்கு ஜோடியாக பாடலில் நடமானடி இருந்தார். பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதினார்.

ஓணம் திருநாளை முன்னிட்டு வெளியான இந்த பாடலை வினித் சீனிவாசன், சிவாங்கி ஆகியோர் பாடினர். இந்நிலையில் யூ-டியூப்பில் வெளியான இந்த பாடலை தற்போதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

அடிபொலி

ஏற்கனவே அஷ்வினின் குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் வெளியாகி ஹிட்டாகின. அந்த வரிசையில் தற்போது, அடிபொலி பாடலும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details