தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'குருதி ஆட்டம்' டைட்டில் சாங் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' படத்தின் டைட்டில் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Oct 14, 2021, 7:50 PM IST

v
v

'எட்டு தோட்டாக்கள்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ். தற்போது அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதி ஆட்டம் என்னும் படத்தை இயக்கி வருகிறார். ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில், டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ப்ரொமோஷன் வேலைகள் தடைபட்டிருந்தன. தற்போது இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

குருதி ஆட்டம்

ஏற்கனவே 'ரங்க ராட்டிணம்' என்ற பாடல் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படத்தின் டைட்டில் பாடல் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details