தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதர்வாவின் 'அட்ரஸ்': முதல் சிங்கிள் தேதி அறிவிப்பு! - அதர்வாவின் அட்ரஸ்

நடிகர் அதர்வா நடித்துள்ள அட்ரஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

adharva-address-single-release-date-announced
அதர்வாவின் அட்ரஸ் முதல் சிங்கிள் தேதி அறிவிப்பு!

By

Published : Jul 14, 2021, 2:26 PM IST

சென்னை: 'குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' படங்களை அடுத்து இயக்குநர் ராஜமோகன் இயக்கியுள்ள படம் அட்ரஸ்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு, கேரளா எல்லைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதைதான் இப்படத்தின் கரு. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில், காளி என்கிற புரட்சிகரமான வேடத்தில் அதர்வா நடித்துள்ளார். இசக்கி பரத், பூஜா ஜவேரி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வரும் வெள்ளியன்று வெளியிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:திரையிடப்படுவதற்கு முன்பே சர்வதேச விருதுகளைக் குவிக்கும் 'கூழாங்கல்'!

ABOUT THE AUTHOR

...view details