தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அடா சர்மா. பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவான '1920' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். த்ரில்லர் படமாக உருவான இப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து நடித்த படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்துவந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்தார்.
பட்டாசு வெடிக்கும்போது விலங்குகளையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் - அடா சர்மா - விலங்குகள் நல விரும்பி அடா சர்மா
சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது விலங்குகளின் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகை அடா சர்மா வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது போட்டோ ஷூட்டில் எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துவருவார்.
விலங்குகள் நல விரும்பியான இவர் தற்போது தீபாவளியை முன்னிட்டி பட்டாசு வெடிக்கும்போது எழும் சப்தத்தால் விலங்குகள் பயப்படும் என்ற கருத்தை வலியுறுத்தி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.