தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அடடே... அடா சர்மா வெப் சீரிஸில் நடிக்கிறாரா...! - வெப் சீரிஸ்

பிரபல நடிகை அடா சர்மா, ஜூம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'தி ஹாலிடே' என்ற இணைய தொடரில் (வெப் சீரிஸ்) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடா சர்மா

By

Published : May 29, 2019, 10:44 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அடா சர்மா. பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவான '1920' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். த்ரில்லர் படமாக உருவான இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து நடித்த படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்துவந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்தார்.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது போட்டோ சூட்டில் எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பும் பதில்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார். இந்நிலையில், அடா சர்மா முதல் முறையாக தி ஹாலிடே என்ற பெயரில் எடுக்கப்படும் இணைய தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் தி ஹாலிடே இணைய தொடரை ஜூம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இது குறித்து, அடா சர்மா கூறுகையில், 'இன்று ஒரு அழகான தேடல் தொடங்கியுள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் உருவாகும் இணைய தொடரில் நடிக்க இருக்கிறேன். பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருந்த நேரத்தில் நல்ல முடிவெடுத்திருக்கிறேன். படப்பிடிப்பு நடக்கும்போது எப்படி பரபரப்பு இருக்குமோ அதைப்போலவே இப்போதும் இருக்கிறது. தி ஹாலிடேயின் படப்பிடிப்பு மொரீஷியஸில் நடைபெற இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

நடிகை அடா சர்மா

தற்போது, திறமைகள் இருந்தும் படவாய்ப்புகள் கிடைக்காமல் திரைத்துரையில் காணாமல் போகும் கலைஞர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். இணைய தொடர் கலாசாரம் வந்த பிறகு வாய்ப்பு தேடி அலையும் கலைஞர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பை தேடி தந்துள்ளது. இதன் மூலம், திறமையான நடிகர்கள், இயக்குநர்கள் தனக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவும், தான் நினைத்ததை எடுக்கவும் செய்கின்றனர். இணைய தொடர் வாய்ப்பிழந்த கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது பெருமையளிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details