தெலுங்கில் நடிக்க உள்ள பிரபுதேவா பட நாயகி - அடா சர்மாவின் புதிய புகைப்படம்
சென்னை : நடிகை அடா ஷர்மா தெலுங்கில் '?' (கேள்விக்குறி) என்னும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
![தெலுங்கில் நடிக்க உள்ள பிரபுதேவா பட நாயகி அடா ஷர்மா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-adah-sharma-2-2808newsroom-1598623359-840.jpg)
தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை அடா சர்மா. பாலிவுட்டில் வித்யுத் ஜாம்வால் நடிப்பில் உருவான ஆக்ஷன் திரைப்படமான 'கமாண்டோ 3' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர், பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கில் கௌரி கிருஷ்ணா தயாரிப்பில், விப்ரா இயக்க உள்ள '?' (கேள்விக்குறி) என்னும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், தற்போதைய கரோனா சூழலை வெற்றிகரமாகக் கடந்த பிறகு படப்பிடிப்புப் பணிகள் தொடங்கும் எனவும், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.