தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

actor kamal in rajahmundry prison: ராஜமுந்திரி மத்திய சிறையில் கமல்ஹாசன் - வைரல் வீடியோ! - Kamal Haasan joined the sets of 'Indian 2' in Rajahmundry central jail

actor kamal in rajahmundry prison: ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக ராஜமுந்திரி மத்திய சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் கமல்ஹாசன்.

Kamal visit Rajahmundry central jail

By

Published : Sep 19, 2019, 1:33 PM IST

Updated : Sep 19, 2019, 2:00 PM IST

கட்சி வேலை, பிக் பாஸ் 3 என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் தனது ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.

Kamal in Rajahmundry central jail for Indian 2

1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவரும் இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரி மத்திய சிறையில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் கலந்துகொள்ள மத்திய சிறைக்கு வந்த கமல்ஹாசனுக்கு காவல்துறை அலுவலர்களும், ரசிகர்களும் அமோக வரவேற்பு அளித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ‘இந்தியன் 2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Sep 19, 2019, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details