கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப். கூட்டணி 99 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். மே 20ஆம் தேதி முதலமைச்சர் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், புதிய அமைச்சரவைப் பட்டியல் இன்று (மே 18) வெளியானது. இதில் கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. ஷைலஜா டீச்சரின் பெயர் இடம்பெறாதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் தராத நிலையில், அவரை தலைமைக் கொறடாவாக கட்சி நியமித்துள்ளது. ஷைலாஜாவை சுகாதாரத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்க வேண்டுமென நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.