தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இருட்டு' எனக்கே பயமா இருந்துச்சு - நடிகை விமலா ராமன் - இருட்டு திரைப்படம்

'இருட்டு' திரைப்படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பயம் வாய்ந்தாகவே இருந்தது என நடிகை விமலா ராமன் தெரிவித்துள்ளார்.

actress-vimala-raman
actress-vimala-raman

By

Published : Dec 4, 2019, 12:10 PM IST

சுந்தர் சி, வி.இசட். துரை கூட்டணியில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் திரைப்படம் 'இருட்டு'. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா, விமலா ராமன், சாக்‌ஷி சௌதரி, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நடிகை விமலா ராமன் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'இருட்டு திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. எனது திரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடிகை விமலா ராமன் சிறப்பு பேட்டி

இருட்டு படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு வெப் சீரிஸின் படப்பிடிப்பிலும், மலையாளத்தில் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறேன். தெலுங்கு மற்றும் தமிழில் இரு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கின்றது. இருட்டு திரையரங்கில் பார்க்க வேண்டிய படம். நிச்சயம் புதிய அனுபவத்தை இப்படம் தரும்' என தெரிவித்தார்.

நடிகை விமலா ராமன், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 2006ஆம் அண்டு வெளியான பொய் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், சேரனின் ராமன் தேடிய சீதை மற்றும் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க...

நடிகை கடத்தல் வழக்கு: வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய நடிகர் திலீப் விண்ணப்பம்

ABOUT THE AUTHOR

...view details