'ப்ரெண்ட்ஸ்', 'கலகலப்பு', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'தில்லாலங்கடி', 'மீசையை முறுக்கு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானாலும் 'ப்ரெண்ட்ஸ்' பட விஜயலட்சுமி என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பெங்களூருவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், ’தான் தமிழ்நாட்டு பெண் என்பதால் கன்னட திரையுலகினர் என்னை மிகவும் துன்புறுத்துகின்றனர்’ என்று குற்றச்சாட்டு வைத்தார்.
கண்ணீர் வடிக்கும் விஜயலட்சுமி பணம் இல்லாமல் வீட்டை இழந்து அன்றாட வாழ்க்கைக்காக போராடி வரும் இவர் குடும்பத்தோடு தோழியின் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தமிழ் திரை உலகினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்கியது.
இந்நிலையில், முகநூல் பக்கத்தில் கண்ணீர் மல்க ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், 'நானே என் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டேன், பிறர் நலனுக்காக என்னை கைவிட்டுவிட்டார்கள். நான், எனது அம்மா, அக்கா ஆகிய மூவரும் வாழ்க்கையை வாழ்கிறோம் என்று சொல்வதைவிட நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
தயவு செய்து ரஜினியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள். ரஜினிகாந்தை பார்த்து பேசினால் என் கவலை தீரும். எனது கடைசி நம்பிக்கையாக இருப்பதே அவர்தான். இருளில் இருக்கும் எனக்கு வெளிச்சம் தருவார் என எதிர்பார்க்கிறேன். இதை ரஜினியிடம் எடுத்துச்சொல்லுங்கள்' என கண்ணீருடன் பேசியுள்ளார். இதனைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.