கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத் துறையில் அறிமுகமானவர் வித்யுலேகா.
இதனையடுத்து அவர், 'வீரம்', 'ஜில்லா', 'மாஸ்', 'பவர் பாண்டி', 'வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிக உடல் பருமனுடன் இருந்த அவர், உடல் எடையைக் குறைந்து ஸ்லிம்மாக மாறினார்.
இவருக்கு கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் வாட்வானியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் வித்யுலேகாவுக்கும், தொழிலதிபர் சஞ்சய்க்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
இதையும் படிங்க:சந்தனத்தேவன் மீண்டும் தொடங்கினால் மிக்க மகிழ்ச்சியடைவேன்; தேன் பட ஹீரோ ஆதங்கம்!