உலகநாயகனின் சூப்பர் ஹிட் படத்தை கணவருடன் பார்த்து ரசித்துள்ளார் நடிகை வித்யா பாலன்.
தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி படுக்கையுடன் பாலிவுட் சென்ற அவர், தொடர் ஹிட்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் தோன்றி தேசிய விருதும் பெற்றார். பாலிவுட் சினிமா தயாரிப்பாளரான சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகியுள்ள அவர், தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.