தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடிக்க ஆசை - வேதிகா - actress vedhika acting experience with Emraan Hashmi

‘த பாடி’ திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து படத்தின் நாயகன் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்த அனுபவத்தையும், தான் எதிர்காலத்தில் நடிக்க விரும்பும் நடிகர் குறித்தும் நடிகை வேதிகா மனம் திறந்துள்ளார்.

actress vedhika acting experience in the body
actress vedhika acting experience in the body

By

Published : Dec 13, 2019, 8:10 PM IST

தமிழில் 'முனி', 'காளை', 'சக்கரகட்டி', 'காவியத்தலைவன்' போன்ற திரைப்படங்களில் நடித்தவர் வேதிகா. தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிய 'த பாடி' எனும் இந்தி படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் நடித்துள்ளார். படம் இன்று வெளியானதில் மிகுந்த குஷியாக இருக்கிறார் வேதிகா.

வேதிகா குமார்

மேலும் படத்தின் ஹீரோ இம்ரான் ஹஷ்மியுடன் பணிபுரிந்த அனுபவத்தையும் பற்றி வேதிகா கூறுகையில், ”இம்ரான் ஒரு அற்புதமான நடிகர். படத்தில் முக்கியமான அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அவருடன் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இம்ரான் மிகவும் பணிவானவர்” என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த ரிஷி கபூர் குறித்து அவர் பேசுகையில், ’மொரிஷியஸில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ரிஷி அனைவரையும் இரவு விருந்துக்கு அழைத்தார். தன்னை அழைக்கமாட்டார் என எதிர்பார்த்திருந்த வேளையில் என்னையும் அவர் விருந்துக்கு ரிஷி கபூர் அழைத்தார்’ என்றார்.

இந்தியில் யாருடன் பணிபுரிய ஆசை என அவரிடம் கேட்கப்பட்டதற்கு, ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடிக்க விருப்பமுள்ளதாக தெரிவித்தார்.

ஆயுஷ்மான் குர்ரானா

இதையும் படிங்க : சுயமாக சிந்திக்கத் தெரிந்தவன் 'ஹீரோ' - சிவகார்த்திகேயன் சொல்லும் பாடம்

ABOUT THE AUTHOR

...view details