'சர்கார்', 'மாரி-2', 'சண்டக் கோழி-2' திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சமீப காலமாக, ஊரடங்கு முடிந்தவுடன் காதலிக்கும் நபரை வரலட்சுமி திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்தார் வரலட்சுமி.
அதில் 'எனக்கு திருமணம் என்பதை ஏன் நான் கடைசியாக தெரிந்துகொண்டேன்? முட்டாள்தனமான வதந்திகள்.. என் திருமணம் குறித்து அனைவரும் ஏன் இவ்வளவு அக்கறையாக இருக்கின்றனர்... நான் திருமணம் செய்வதாக இருந்தால் வீட்டுக் கூறை மேல் ஏறி நின்று இதுபோன்று செய்திகள் எழுதும் உங்களைப்போன்ற ஊடகத்திற்கு தெரிவிக்கிறேன்... எனக்கு திருமணம் கிடையாது. நான் திரைப்படங்களை விட்டு விலகவில்லை' என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தன் திருமணம் குறித்தான வதந்திகளுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க...விலங்குகளுக்கு உணவளியுங்கள் - வரலட்சுமி சரத்குமார்