தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'உங்களின் எதிர்மறை எண்ணம் தான் என்னை வலிமையாக்கியது'- வரலட்சுமி சரத்குமார் - Varalakshmi completes 25 movies

நடிகை வரலட்சுமி சரத்குமார், இதுவரை தான் 25 படங்களில் நடித்து முடிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்மறை எண்ணம் தான் என்னை வலிமையாகியது - வரலக்ஷ்மி சரத்குமார்
எதிர்மறை எண்ணம் தான் என்னை வலிமையாகியது - வரலக்ஷ்மி சரத்குமார்

By

Published : Jan 25, 2020, 1:20 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012ஆம் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சிறந்த கதாபாத்திரம் உள்ள கதையை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் கோமளவல்லி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என்று தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் வரலட்சுமியின், கைவசம் தற்போது 9 திரைப்படங்கள் உள்ளன. ஆதலால் இந்த ஆண்டு கண்டிப்பாக வரலட்சுமிக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரலட்சுமி தற்போது 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், 'இதுவரை அன்பு காண்பித்த அனைவருக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவை கண்ட ரசிகர்கள் விரைவில் இன்னும் பல படங்கள் நடித்து, உயர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மலையாள ரீமேக் படத்திற்காக முரட்டு அவதாரம் எடுக்கும் ஆர்.கே. சுரேஷ்

ABOUT THE AUTHOR

...view details