தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'BB ஜோடிகள்' நிகழ்ச்சியில் இருந்து மனமுடைந்து வெளியேறிய வனிதா... காரணம் யார்? - விஜய் டிவி

”பணியிடத்தில் தொழில் முறை, நெறிமுறை அற்ற நடத்தையை என்னால் ஏற்கவே முடியாது. ஈகோ பிரச்சினைகள் காரணமாக எனது தொழில் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபரால் நான் அவமானப்படுத்தப்பட்டேன், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டேன்” என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்

By

Published : Jul 3, 2021, 3:26 PM IST

இதுவரை வெளியான அனைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களையும் கொண்டு நடைபெற்று வரும் தனியார் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி ’பிபி ஜோடிகள்’.

வெளியேறும் வனிதா

கரோனா ஊரடங்கின் மத்தியில் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில், குக்கு வித் கோமாளி, பிக் பாஸ் நிகச்சிகளின் வரிசையில்நடிகை வனிதா விஜயகுமார்பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரின் சமீபத்திய நடனம் கூட பாராட்டுகளைப் பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காரணம் என்ன?

அதில், “BB ஜோடிகளில் எனது காளி அவதாரத்திற்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்த அனைத்து ஊடகங்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நான் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அறிவிக்கும் முன்பு உங்கள் அனைவரிடமும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தேன்.

பொதுவாக கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத நபர் நான். இப்படிப்பட்ட நபர் என் குடும்பத்திலோ, அல்லது வெளியிலோ என எங்கிருந்தாலும் என்னால் ஏற்க முடியாது. இது உலகத்துக்கே தெரியும்.

பிக் பாஸை 3 தொடங்கி, விஜய் டிவி எப்போதுமே எனக்கு ஒரு குடும்பமாகவே இருந்து வருகிறது. குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளிலும், மற்றும் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் நான் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை வைத்திருக்கிறோம், அது என்றுமே தொடரும்.

என்னை அவமானப்படுத்தினர்...

ஆனால் பணியிடத்தில் தொழில் மற்றும் நெறிமுறையற்ற நடத்தையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஈகோ பிரச்சினைகள் காரணமாக எனது தொழில் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டேன்.

வனிதா விஜயகுமார் அறிக்கை

பணியிடத்தில் பெண்களை பயன்படுத்திக் கொள்வதில் ஆண்களைத் தாண்டி, பொறாமையுடன் நமது வாய்ப்புகளை பெண்கள் அழிக்க முயற்சிப்பது மோசமானது. லாக் டவுன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததால் நான் திரைப்பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். என் படங்களிலும், டிவியிலும் புதிய நிகழ்ச்சிகளிலும் நீங்கள் தொடர்ந்து என்னைப் பார்ப்பீர்கள்.

மோசமாக நடத்திய மூத்த போட்டியாளர்

உங்களுக்கு மூத்தவரான ஒருவர், தன் கடின உழைப்பின் மூலம் பெரிய உயரத்தை அடைந்த ஒருவர், அதிக போராட்டங்களை சந்திக்கும் வயதில் சிறிய நபர்களை கீழ்நோக்கி பார்த்து, அவர்களை அவமதித்து, சிறுமைப்படுத்துவது கவலை அளிக்கிறது. குறிப்பாக மூன்று குழந்தைகளின் அம்மாவாக தனியாக, குடும்பம் அல்லது கணவரின் ஆதரவில்லாமல் சாதித்து வெற்றி பெறுபவர்களின் பக்கம் பெண்கள் நிற்க பழக வேண்டும். அதைவிடுத்து அவர்களின் வாழ்வை துன்பகரமானதாக மாற்ற முயற்சிக்க கூடாது.

BB ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடைபெறுவது வருத்தமளிக்கிறது. எனினும் மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெறுவதைத் தாண்டி, பங்கேற்பதும் சவாலை ஏற்றுக்கொள்வதும் தான் முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார்.

மன்னிக்கவும் சுரேஷ் சக்கரவர்த்தி...

மேலும் தனது இணையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமாக சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோரியுள்ள வனிதா, ”சரியான விஷயத்தை நான் செய்ய வேண்டியிருந்தது. என்னால் நீங்களும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஆனால், எனது முடிவில் தொழில் ரீதியாக என்னுடன் நின்ற ஒரு உண்மையான நபர் நீங்கள் தான். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மனைவியை பிரிகிறார் அமிர் கான்!

ABOUT THE AUTHOR

...view details