நடிகை வனிதா 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் வனிதா பங்கேற்று வருகிறார்.
'பிபி ஜோடி'யில் இருந்து வெளியேறிய வனிதா
பிக்பாஸ் ஜோடிகள், தற்போது 'பிபி ஜோடிகள்' என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணனும், நடிகர் நகுலும் நடுவர்களாக இருக்கின்றனர்.
ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக வனிதா அறிவித்திருந்தார். ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டுமென நகுல் கூறினார்.
ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை
இதுகுறித்து நகுல் கூறியதாவது, "காளி வேடத்தில் இருந்த வனிதா எங்களை தரக்குறைவாக பேசினார். என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை; அவருடைய அனுபவம் என்ன? அவரை அப்படி பேசலாமா? அவரிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்" என கூறினார்.
நான் யாருன்னு உலகுக்கு தெரியும்
நகுலின் இந்த கருத்துக்கு வனிதா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, " பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிபி ஜோடிகள் என தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறேன்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதையோ துன்புறுத்துவதையோ நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, இது இந்த உலகுக்கே தெரியும்.
பணி செய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறி முறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மேசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.
இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள நேரமில்லை
நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது என்பதற்கும், அதன்பின் நடுவர்களை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
எனக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்ணை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என நான் முடிவு செய்தேன். எனக்கு ஒருவருடன் பிரச்னை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்னை இருந்தது என்று அர்த்தம்.
அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வனிதா