தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'உங்க வேலையை நீங்க பாருங்க' - லட்சுமி ராமகிருஷ்ணனிடம் எகிறிய வனிதா! - Vanitha Vijay Kumar marriage

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்ட கருத்துக்கு வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

வனிதா
வனிதா

By

Published : Jun 29, 2020, 6:39 PM IST

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை என்பவரை இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பீட்டர் பாலின் மனைவி தனக்கு முறையாக விவாகரத்து வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இதையறிந்த நெட்டிசன்கள் வனிதா விஜயகுமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "வனிதா விஜயகுமார் தனது வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறார்.

இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் பிரச்சனையில் போய் முடிந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவை கண்ட வனிதா விஜயகுமார், “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை.

நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details