தென்னிந்திய திரைப்படங்களுள் புகழ்பெற்ற நடிகை ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
ஊர்வசி மலையாள திரைப்படங்களில் பிரதானமாக நடித்து புகழடைந்தார். இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற "கண்ண தொறக்கணும் சாமி" என்னும் பாடல் அந்த கால இளசுகளின் தூக்கம் கலைத்தது.